000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சக்ராயுதமூர்த்தி |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a அட்ட வீரட்டர்களில் ஒருவராக ஜலந்தரனை வதைத்த சக்ராயுதமூர்த்தி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பூமியில் உள்ள எந்த ஆயுதங்களாலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்ற வரம் பெற்ற சலந்தராசுரனை பூமியைக் கீறி சக்கர வரைந்து அதனையே ஆயுதமாகக் கொண்டு வதைத்த சக்ராயுதமூர்த்தி, சிவ வடிவங்களுள் எட்டு வீரச்செயல் புரிந்தவருள் ஒருவர். சலந்தராசுரனை யோகபட்ட நிலையில் அமர்ந்தவாறு வதைக்கிறார். நான்கு திருக்கைகளில் மேலிரு கைகளில் குண்டிகையையும், அக்கமாலையையும் கொண்டுள்ளார். கீழிரு கைகள் மடக்கிய முழங்காலுக்கு வெளியே நீண்டுள்ளன. யோகபட்ட நிலையில் அமர்ந்திருக்கும் இறையவனின் கீழ் பெரிய உருவமாக சலந்தரன் காட்டப்பட்டுள்ளான். அவனது வலது தோளில் இறைவனால் ஏவப்பட்ட சக்கரம் காட்டப்பட்டுள்ளது. சலந்தரனின் வதைபடலத்தைக் காணுவதாக மேலே இரு உருவங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்காட்சியை கண்டு போற்றுகின்ற கையையுடைய தேவர்கள் மேலே பக்கத்திற்கு ஒருவராகக் காட்டப்பட்டுள்ளனர். ஜடாமகுடம் தலையலங்காரமாகக் கொண்டுள்ள இறையனாரின் நீள்காதுகள் முன் தோள்களில் வழிந்தோடுகின்றன. அரக்கன் பெரிய உருவமாக மரணத்தைக் கண்டு பிதுங்கிய உருட்டு விழிகளுடன் நிலத்தில் வீழ்ந்த நிலையில் உள்ளான். மகுடம் தரித்துள்ள ஜலந்தரனின் முப்புரிநூல் அசுரனின் மடக்கிய இடது காலில் வீழ்ந்து கிடக்கிறது. உருவத்திற்கேற்ற பெரிய காதணிகளைக் கொண்டுள்ளான். கைகளில் கடக வளை, முன்வளைகள் காட்டப்பட்டுள்ளன. வலது கையில் கதாயுதத்தைப் பிடித்துள்ளான். |
653 | : | _ _ |a சலந்தரன் வதை, சக்ராயுதமூர்த்தி, சலந்தரமூர்த்தி, ஜலந்தரமூர்த்தி, அட்டவீரட்டானர், இராஜசிம்மவர்மப் பல்லவன், காஞ்சிபுரம், தொண்டை மண்டலம், பல்லவர் சிற்பம், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கலைகள், சிவ வடிவங்கள், சிவன் சிற்பங்கள், சிவன் சிலைகள், இராஜசிம்மேஸ்வரம், இராஜசிம்மன் கற்றளி, கைலாசநாதர் கோயில் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கைலாசநாதர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.84226806 |
915 | : | _ _ |a 79.6897132 |
995 | : | _ _ |a TVA_SCL_000071 |
barcode | : | TVA_SCL_000071 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |